பேரன்பு
எல்லைகளற்று விரிந்து 
கிடக்கும் இயற்கையின் 
பேரன்பில் 
துளிவிஷமாய் மனிதன்..........
மீள் உருவாக்கம் 
தேவைப்படும் ஆலயங்களில் 
பேரன்பின்  சலனமற்ற 
ஒத்திகையாய் சலசக்கும் காற்று.......
மழை வேண்டிடும் மனங்களில் 
எல்லாம் சுடர்விடும் 
பேரன்பாய் வேள்வித்தீ வளர்க்கும் 
வியர்வைத்துளிகள்........ 
சொல்லாத உண்மைகளும் 
சொல்லிய பொய்களும் சந்திக்கும் 
தருணங்களில் மெல்லிய
உணர்வாய் மேலெழும்பும் 
பேரன்பின் மனசாட்சி...... 
பிறிதொரு பாத்திரத்தில் 
பிட்சை இட்ட பின்பும் 
தன்னுடைய செல்வம் என 
மனம் எக்களிப்பதும் 
பேரன்பின் மிச்சம்...... 
பேரன்பைத்தவிர வேறுஎதுமில்லாத 
வாழ்க்கையில் பேரன்பையே  தேடுது   
மனசாட்சி எப்பொழுதும்!!!.......................

