காசுக்கு வரும் வேசி போல

மதம் என்பது எதுவெனில்
மனதிற்கு ஆறுதல் அளிக்கும்
மகத்தான வடிகாலே ஆகும்.

மாறி வரும் காலத்தினாலே - மனிதன்
மிருகமாய் மாறுவதை தடுக்கும்
மருதோன்ற செய்யும் மருந்தே மதம்.

மாதத்திற்கு மாதந்தோறும்
மாற்றிக் கொள்ள நினைப்பவரோடு
மல்லுக்கு நிற்கக்கூடாத உன்னதம் மதம்.

காசுக்கு வரும் வேசி போல
காண்போர் கூறும் கருத்தையேற்று
காசுக்காக மாறக் கூடாதது மதம்.

கலவரத்துக்குக் காரணமாக கீழான
கருத்தைக் கூறி அறிவில் மேலானோர்
காரி உமிழும் கருத்தை அகற்றுவதே சிறந்த மதம்

மதிப்பைக் கூட்டச் செய்தும்
மாறும் காலத்தின் தவறை அழித்தும்
மாபெரும் புரட்சிக் கருத்தை

மனங்களில் தவழச் செய்யும்
மாமருந்தாய் இருக்க வேண்டியது எதுவோ
அதுவே மண்ணில் சிறந்த மதம்.
__ நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (8-Feb-19, 7:19 pm)
பார்வை : 329

மேலே