தமிழ் திரைப்பட க்ளைமாக்ஸ் காட்சிகள்
தமிழ் திரைப்பட " க்ளைமாக்ஸ் " காட்சிகள்
**********************************************************************
அறைதன்னுள் பூட்டிவைத்த இரண்டுகால் பசுங்கன்றாய்
பெருக்கல் குறிபோல கயிறால் நன்குகட்டி
முறைமாமன் கவனத்தில் நாயகியவள் படும்பாடு
நலிவடைந்த தோற்றத்து கதையம்ச நாயகனும்
பலமுற்ற வில்லனவன் கைத்தடிகள் பலபேரை
சலிக்காது மேல்பறந்து மொத்தமாய் துவைத்தெடுத்து
இளவிரல் ஒன்றினாலே மார்குத்திச் சாகடித்து
இறையெனும் நாயகனும் நாயகியை மீட்டெடுக்க
குறையின்றி வணக்கத்தை காட்டியே முடிப்பாரே !