பகவத்கீதா வெண்பா கர்ம யோகம் 11 சுலோகம் 31 32 33
31 .
பின்பற்று வார்பொறாமை இன்றிஇக் கோட்பாட்டை
என்றும் உறுதியுடன் அன்னவரும் இக்கர்மம்
இன்றி விடுபடு வார் !
32 .
எனதிக்கோட் பாட்டை இகழ்வான்பின் பற்றாதான்
எந்தஞான மும்விவேக மும்மில்லா மூடனவன்
கெட்டோன் எனநீ அறி !
33 .
ஞானி இயல்பு வழிநடக் கின்றான்
உயிரினமும் தன்னியல்பு தன்னிலே செல்லும்
தடைவந்தென் செய்யமுடி யும் ?
-----கீதன் கவின் சாரலன்