நிறைவு

காட்டில் பொறுக்கிய சுள்ளியுடன்
கட்டாந் தரையில் அடுப்புவைத்த
நாட்டுப் புறத்து சமையலிலே
நிறைந்திடும் வயிறும் மனமும்தான்,
வாட்டம் வாழ்வில் வந்தாலும்
வெளியே காட்டிடா நிறைவிதுவே,
ஆட்டம் காட்டிடும் நாகரிகம்
அசைக்க முடியா வாழ்விதுவே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (11-Feb-19, 6:17 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : niraivu
பார்வை : 52

மேலே