என் உயிர் தோழியாய்

உன் குறுஞ்செய்தி /
எனக்கு ஒரு சீண்டலாக.
தோன்றியது /
உன் தொடர் உரையாடல் /
என் பணிக்கு இடையூறாக/
இருப்பது போல் எரிச்சல் மூட்டியது /

என்னைப்பற்றிய கற்பனையோடு /
நீ எழுதும் நெடுங் கவிதை எல்லாம்/ பெரும் தொல்லை போல் /
எண்ணம் தோன்றியது/

நான் ஆண் என்ற ஆணவம்
தலைக்கேறியது /
சாதி மதம் பிரிக்கும் குணம்
தலை விரித்தாடியது /
பணம் படிப்பு என்ற கர்வம் /
என் நெஞ்சில் நிலைத்து நின்றது /

தாய்க்கு ஒரு மகன் என்ற
காரணத்தால் /
கலியாணக் கற்பனை
பெரும் அளவே /
இறகு அடித்துப் பறந்தது /

நீ வாழ்வு இளந்தவளாச்சே/
என்ற ஏளனம் எனக்குள்ளே படர்ந்தது /
உன் உணர்வான வார்த்தைகளையும் /
உணர்சியான கெஞ்சல்களையும் /
என் ஆண் மனம் திரை போட்டுத் தடுத்தது/

நீ தொடர்ந்து செய்தி அனுப்பினாய் /
விடாது அன்பு வளர்த்தாய் /
உன் மூச்சு நிறுத்தி பேச்சு மறந்து /
உன் உயிர் பூதவுடல் விட்டு /
பிரிந்து பூலோகம் மறந்து /
விண் உலகை அடையும் வரை
நிறுத்தாமல்/
என்னை அழைத்தாயே வெறுக்காமலே/ உன் உயிர் திறந்தாயே (தேவி )

இப்போது என் இரு விழி
கலங்குகின்றது /
வெறுப்பு விருப்பாக மாறியது /
சாதி மதம் இவைகளைத் தாண்டி/ உன்னை மறுமணம் செய்ய/ சாதனைபோல் என் மனம் தேடுகிறது /

உன் விரல்களை தீண்ட
எண்ணம் எழுகிறது /
உன் செய்தியை எதிர் பார்க்கிறேன் /
உன் நிழல் படம் சேகரிக்கின்றேன் /
அதில் கள்ளம் இல்லாத உன்
புன்னகை கண்டு /
என் கல்லான நெஞ்சம்
புண்ணாகிவலிக்கிறது இன்று. /

காலம் கடந்து வந்த காதல் /
கனவையும் தடுத்து /
கண்ணீரை வரமாகக் கொடுக்கின்றது/
உன் உடலையும் நெருப்பு
சொந்தமாக்கிய பின் /
உன் மேல் வந்தது விருப்பு /
தவிக்கின்றேன் உன்னை
நெருங்கையடி /
என் உயிர்த் தோழியாய் வந்த காதலியே./

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (13-Feb-19, 6:06 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : en uyir thozhiyaai
பார்வை : 298

மேலே