ஒரு பாசத்தின் குமுறல்

ராசா நு சொல்ல ஆத்தாவும் இல்ல

ஆறுதல் சொல்ல சொந்தமும் இல்ல

என் வாழ்கை நொடியில் வறண்டு போனதே

என் பேரும் அநாதை ஆனதே

நடை பயில கற்று கொடுத்தாய்

நான் கவலை கொண்டாள் கண்ணீர் கொண்டாய்

எனனை உன் கண் என நினைத்தாய்

உன் கண்ணைத்தான் இப்படி பிரிய முடிந்ததம்மா

சொந்தங்கள் பிரிவதற்கா சோகத்தில் முடிவதற்கா

ஒன்னும் புரியலையே வாழ்கை வெறுக்கிறதே

சோகம் தொண்டை அடைக்கிறதே

ஒவ்வொரு நொடியும் நெஞ்சம் வெடிக்கிறதே

பொத்தி பொத்தி வளர்த்தாலும்

ஓரான் பொண்ணு உறவாகுமா

முறைகொண்டு நடந்தாலும்

விரும்பாத மணம் விரும்புமா

இல்லை பிழை என்று கருதுமா

ஊரு சொல்லும் முறைக்கு வாழ்கை வாழ்ந்திட

நெஞ்சம் ஏற்பதில்லை

பிழை செய்யா எனக்கு தண்டனையா

கண்ணீரால் ஆனா முள்வேலியா

உறவுகள் உருகிடவா

நான் மெழுகாய் கரைந்திடவா

நானும் தொலைந்திடவா

எழுதியவர் : rudhran (30-Aug-11, 3:52 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 387

மேலே