அசிங்கம்.

கழிவறைக் கதவுக்குள்
விலைமகள் எண்.

விருப்போ., வெருப்போ
படித்து
காசின்றி அவளை
மனதில் கட்டியணையனைத்து

நிமிடத்தில் வெளிவந்து
அசிங்கம் என்று
அலட்டிக் கொண்டனர்.

அவர் கால்கள்
கழுவப் படவேயில்லை

அசிங்கம் ஒட்டிக் கொண்டது

சிரித்தது கதவு
கீரிச்........... கீரிச்........

எழுதியவர் : கழுகுமலை ஸ்ரீகாந்த் (30-Aug-11, 5:15 pm)
Tanglish : asinkam
பார்வை : 501

மேலே