விழித்தெழுந்தது காதல்

என்னைக் கடக்கும் வேளை
எனக்குள் விதைத்துச் செல்கிறாய்
காதல் விதை
** ** ** ** ** ** ** ** ** **
மன இறுக்கம் போக்க‌
உனை நினைத்தால் போதும்
எனை நானே மறப்பேன்
** ** ** ** ** ** ** ** ** **
காயப்பட்ட மனது
மருந்தாய் இருக்கிறது
உன் காதல்
** ** ** ** ** ** ** ** ** **
அழைத்தால் தோழியுடனே வருகிறாய்
எனை சோதிக்கவா?
எனக்கு போதிக்கவா?
** ** ** ** ** ** ** ** ** **
தனிமை கூட இருக்கும் போதெல்லாம்
தெரியாமல் இதயம் வந்துவிடுகிறாய்
திருடியே!
** ** ** ** ** ** ** ** ** **
கவர்வது உனக்கு கண் வந்த கலை
ஒரு கண் சிமிட்டலில்
நடத்திச் செல்கிறாய் காதல் பாடம்
** ** ** ** ** ** ** ** ** **
ஓரிடத்தில் நீயும் நானும்
விழிகளுக்குள் மோதல்
விழித்தெழுந்தது காதல்
** ** ** ** ** ** ** ** ** **
காயம் பட்டது எனக்கு
கண்ணீர் வந்தது உனக்கு
சிரித்தபடி காதல்
** ** ** ** ** ** ** ** ** **
இதயம் இதயம் சேர
உதயமாகும் காதல்
சிதிலமடையும் தனிமை
** ** ** ** ** ** ** ** ** **
புன்சிரிப்பு கொடுக்கும்
உன்சிரிப்பு போதும்
சிறப்பாகும் காதல்
** ** ** ** ** ** ** ** ** **

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (14-Feb-19, 11:02 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 108

மேலே