மாமா உன் மடி மேலே

மாமா உன் மடி மேலே - இந்த
மைனா கொஞ்சம் தலை சாய
அளவான உன் முரட்டுக் கையால்
அழகாக என் தலை கோத
அதனால் ஆன கிறுகிறுப்பு
அனலாக என் உடல் பரவ
அன்பான முத்தம் கொடுத்து
அனலை நீ அணைப்பாயோ

வேண்டாமடி அழகு கள்ளி
உன் விளையாட்டை காட்டாதே
மாறுகின்ற மேகம் போல் - உன்
மனசை தினம் நீ மாத்திக்கிற
மகத்தான என் காதலை நீ
பரிகாசம் தினம் பண்ணுகிற
தகும் காலம் வந்தால் தான்
என் தரம் உனக்கு தெரியுமடி
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (15-Feb-19, 3:55 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : maamaa un madi mele
பார்வை : 151

மேலே