பாடலை மாற்றி அமைத்தல்

கால்கள் இன்றி வெண்ணிலவு
தரையில் இறங்கி வந்ததோ.
நீலக் கடலில் நீந்தும் மீனும்
மயங்கி நின்றதோ ?

மாவிலையின் துளிர் போலே
மிளிர்கின்ற இதழோ
மது இல்லாமல் மயக்க வைக்கும்
மது நிறைந்த விழியோ.?

புருவம் ஒரு வளைந்த கீற்றாக
பார்பை அது குறும்பாக
பருவமது பனியாக ( பூ )
தொடுக்கப் பிறந்தவளோ.?

திரு மகளின் வண்ணத்தில்
துழை விழுந்தது
போன்று இருக்கும் கன்னத்தில் மெல்லிசையை நான் இசைக்க
எழும் நாதம் எல்லாம்
இவள் பெயர் தானோ?

மின்னும் வெள்ளி போல் விரல் நகமும்
சின்னத் தாமரைத் தண்டு போல் வளைக்கரமும்
தெவட்டாத மாங்கனிகள் இரு புறமும்
தூக்கி வரும் பூ மகளோ?

ஆற்றில் ஆழம் பார்க்கும் நாரை போன்ற நீள்கழுத்தும்.
குயில் ஓசைக்கு எதிரான குரல் வளம் தான் கொண்டவளோ?

செங்கரும்பு சார் எடுத்து
சந்தனத்தில் நிறம் எடுத்து
பொன் மொழியிலே சொல்
அமைத்த இந்த மங்கை
அழகை என்னவென்பேன் .?

திடல் போல் தொடை இருக்க
திஷ்ரி பொட்டுப் போல் மச்சம் இருக்க
படைத்தவனின் முழுத் திறமையையும்
பறித்தெடுத்த பேரழகி என்பேன்.

(நிலவு ஒரு பெண்ணாகி ) என்னும் பாடலை மாற்றி எழுதும் போட்டி எப்படி இருக்கு ;-)

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (15-Feb-19, 6:14 pm)
பார்வை : 47

மேலே