தெத்துப்பல் புன்சிரிப்பு

சொல்வரிசை யில்என்சொல் மாறின் தளைதட்டும்
பல்வரிசை யில்தெத்துப் பல்லோ களைகட்டும்
பல்லழ கின்வெண்பா வாய் !

தெத்துப்பல் புன்சிரிப் பிற்குநித் தம்தமிழில்
பத்துப்பா தீட்டிட லாம் !

தெத்துப்பல் உன்புன்ன கைச்செவ் விதழ்ப்பேழைச்
சொத்துபொத் தாமல் சிரி !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Feb-19, 10:57 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 339

மேலே