உரையாடல்

நினைவிருக்கிறதா உனக்கு
நம் முதல் உரையாடல்
கைகளை ஏந்தி நின்றேன்
வாயெல்லாம் பல்லாக

எவர் முகமும் பார்த்துப் பேசிப்
பழக்கமில்லை ஆனால்
அன்று நாம் பேசிய சில நொடிகளில்
கண்களை உன் முகம் மீதே
படர விட்டேன்

இன்றும் அப்படித் தான் இருக்கிறேன்
கைகள் திறந்து
மார் விரித்து
அணைத்துக் கொள்ள
கொல்லாமல் சாய்ந்து கொள்

ஏந்திய கைகளால்
தாங்கிக் கொள்கிறேன்

எழுதியவர் : (18-Feb-19, 11:57 am)
சேர்த்தது : Mariselvam
Tanglish : uraiyadal
பார்வை : 58

மேலே