கருக்காய் கண்டதை

கடவுளை நம்பியவன் கட்டினான் ஆலயத்தை
கல்வியை நம்பியவன் கட்டிவித்தான் கல்விக் கூடத்தை

கடவுளின் பெயரால் கலைகள் வளர்ந்தன
கல்வியின் பெயரால் காவியங்கள் ஆயின

கருக்காய் கண்டதை கல்லில் வைத்தான் ஆலயத்தில்
கருத்தாய் காணப்போவதை கல்வியில் வைத்தான் பள்ளியில்

கடவுளின் பெயரால் பயத்தினை பக்தியில் வைத்தான்
கல்வியின் பெயரால் கற்பதை ஆய்வில் வைத்தான்

கடவுளும் கல்வியும் கண்ணியமாய் வளர
கலகக்காரனோ இரண்டிலும் வகுப்பு வாதம் வைத்தான்

இதனாலே மாண்டவர்கள் ஏராளமைய்யா - இதன்போலே
இந்நிலை இனிமேலும் தொடரலாமோ அய்யா.
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (19-Feb-19, 8:49 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 1101

மேலே