நீங்கள் இளைஞர்களா அல்லது தீவிரவாதிகளா

எதையும் ஒரு ஆர்வம், நேசிப்போடு கவனமாக செய்ய வேண்டும்.

நம் ஆன்மா விரும்பாத காரியத்தை நாம் செய்யும் போது நிச்சயம் ஆர்வமோ, நேசிப்போடு கலந்த கவனமோ இருப்பதில்லை.

காஷ்மீரில் இளைஞர்கள் பெரும் அளவில் தீவிரவாதிகளாக மாறி இருக்கிறார்கள் என்ற தகவல் மிகக் கவலைப்பட வைக்கிறது.

நம் கைகளைக் கொண்டே நம் கண்களை குத்தும் அளவிற்கு நம் கைகளுக்கு நாம் துரோகம் செய்துவிட்டோமா? என்பதை குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.

புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டவன் உள்ளூர் இளைஞன் என்றால் ஏன்? எதனால்? யாருக்காக? என்று பல கேள்விகள் எழுகின்றன.
அரசியல் பிறக்கும் போதே தீவிரவாதத்தை உருவாக்கி அதை கொண்டு மக்கள் முன் அரசியல் சக்கரம் நகர்கிறது.

கையில் ஆயுதத்தை ஏந்திக் கொண்டு சுதந்திரம், அமைதி குறித்து பேசினால் அது மிரட்டல் விடுப்பதற்கு சமம்.
மிரட்டல் விடுத்தே யாரையும் நிரந்தரமாக அமைதிப்படுத்த முடியாது.

பாக்கிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் எப்படி இந்தத் தாக்குதலை நடத்தினார்கள்?
முதற் தூண்டல் இனத்தால் பிரிக்கப்படுதல்.
அதைத் தான் இளைஞர்களிடையே செய்கிறது.

தமிழ்நாட்டில் எப்படி தமிழர்கள் என்ற முழக்கம் எழுகிறதோ அதே போல காஷ்மீரில் காஷ்மீரி என்ற முழக்கம் பிரிவினையை ஏற்படுத்துகிறது.

இரண்டாவது நம்ம ஊரில் யாரோ ஒருவர் இன்சினியரிங் படித்திருப்பார்.
அவரை பற்றி ஊரே பெருமையாகப் பேசும்.
அதைக் கண்டு இன்னும் சிலருக்கு இன்சினியரிங் ஆசை வரும். அதே போல தான் காஷ்மீரில் இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாற்றப்படுகிறார்கள்.
யாரோ ஒருவர் தீவிரவாதக் குழுவில் இணைந்திருப்பார்.
அவரோடு தொடர்பு கொண்டு அவரது கருத்துகளால் ஈர்க்கப்பட்டு பெரும்பாலான இளைஞர்கள் தாங்கள் பள்ளிக்கூடம் படிக்கும் போதே தீவிரவாதிகளாக மாற்றப்பட்டு விடுகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் பீடி, சிகரெட், மது அருந்துதலை போன்றவை எப்படி நாகரிகத்தின் பெருமை, வளர்ச்சி என்று கூறி பழகப்படுகிறதோ, அதே போல் தீவிரவாதம் கலாச்சாரமாக மாறிக் கொண்டிருக்கிறது.
பல பெண்களிடம் தொடர்பு கொண்டு கள்ள உறவு கொண்டு, அதை தன் நண்பர்களிடம் ஆண்மை என்று பெருமையடிப்பதை போல பல உயிர்களை கொன்றதைப் பெருமையடித்து தீவிரவாதம், பயங்கரவாதம் வளர்க்கிறது.

நாங்கள் சாக இருக்கிறோம்.
ஆனால் உங்களை வாழ விடமாட்டோம். என்று சூளுரைப்பது மிகப் பயங்கரமான மன நோய்.
இந்த நோய் முற்றிப்போய்விட்டதால் நிச்சயம் மிகப்பெரிய அழிவைக் கூட செய்வதற்கு தயங்காது.

காஷ்மிரில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்கிறான்.
இல்லாவிடில் உங்கள் சவப்பெட்டிகளை நிரப்பிக் கொண்டே இருப்போம் என்று மிரட்டுகிறான்.
இதில் அந்த தீவிரவாதிகளுக்கு தங்கள் அமைப்பு முழுவதையும் காஷ்மீரில் இருந்து அழித்துவிடுவார்களோ என்ற பயம் அதிகரித்து விட்டதே இதன் முக்கிய காரணமாக இருக்க வேண்டும்.

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதும்,
அவர்களை காப்பற்ற நினைப்பதும்,
அதற்கான முயற்சியில் ஈடுபடுவது என பல குற்றச் செயல்கள் காஷ்மீரி இளைஞர்களால் நடத்தப்படுகின்றன.

தங்களை இந்தியர்களாக அவர்கள் காட்டிக் கொண்டதாகவோ,
தேசபக்தியோடு இருப்பதாகவோ ஒரு செய்தித்தாளில் கூட செய்தி வரவில்லை.

பிரிவினைவாதத் தலைவர்கள் அந்த தீவிரவாதத்தை காப்பாற்றுவதற்காகவே முயற்சி செய்கிறார்கள்.
டெராடூன், போன்ற இடங்களில் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் புல்வாமா தாக்குதலுக்கு ஆதரவாகவும், இந்திய நாட்டுக்கு எதிராகவும் வாட்சாப், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் Status வைத்ததாகவும் அதனால் காஷ்மீரி மாணவர்கள் கல்லூரி பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அது குறித்து நரேந்திர மோடியும், இராகுல் காந்தியும் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று முன்னால் காஷ்மீர் முதலமைச்சர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ஒருபக்கம் புல்வாமா தாக்குதலில் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாக்கிஸ்தானிற்கு தொடர்பில்லை என்று பேசி இருக்கிறார். அதே நேரம் இந்தியா டுடேவில் பேசிய பாக்கிஸ்தான் முன்னால் பிரதமர் முஷ்ரப், இந்தத் தாக்குதலை ஜெய்ஷ் இ முகம்மது அமைப்புதான் செய்தது என்றும்,
இந்தியா பாக்கிஷ்தானில் துல்லியத்தாக்குதல் எதையும் நடத்தவில்லை என்றும்,
அரசியலிற்காக தேர்தலுக்காக நரேந்திர மோடி இராணுவ வீரர்கள் மேல் அக்கறை இருப்பதைப் போல் நடிக்கிறார் என்றும் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆனால் முஷ்ரப் பேசியதாகவோ, தீவிரவாத அமைப்புகள் அறிக்கை விட்டதாகவோ பிபிசி தமிழில் எந்த செய்தியும் வரவில்லை.

புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆர் டி எக்ஸ் வெடிமருந்து பாக்கிஸ்தான் இராணுவத்தால் அதன் தலைமை செயலகத்தில் பயங்கரவாதிகளிடம் அளிக்கப்பட்டதாக சில சேதி வெளி வந்துள்ளது.
ஆனால் பிபிசி தமிழில் அப்படி ஒரு செய்தி வரவில்லை.
பாக்கிஸ்தான் தற்போது தீவிரவாதத்திற்கு எதிராக மாறி உள்ளதாக அதோடு இந்தியா பாக்கிஸ்தானிற்கு எவ்வாறெல்லாம் அழுத்தம் கொடுக்கலாம் என்பதை பற்றியெல்லாம் செய்திகள் பிபிசி தமிழில் வெளி வந்து உள்ளன.

சில நேரங்களில் செய்திகளின் உண்மைத் தன்மையையே மாற்றிவிடுகிறார்கள்.

புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் இறந்ததாக சில பத்திரிக்க்கை சேதிகள் கூறுகின்றன.
இன்னும் சில பத்திரிக்கைகள் 42 என்றும், இன்னும் சில 46 என்றும் கூறுகின்றன.
இவற்றின் உண்மை தன்மை என்ன என்பதே மாறுபடுகின்றது.

இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறுவதற்கு இது போன்ற பத்திரிக்கைகளும் காரணமாக உள்ளன.

இப்படி எண்ணற்ற விடயங்கள் பரவி கிடக்கின்றன.
இப்போது இளைஞர்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி நீங்கள் இளைஞர்களா? அல்லது தீவிரவாதிகளா?
என்பதைத் தான்.

அதோடு மட்டுமல்லாமல் நமது இராணுவத்திலும் தீவிரவாத கருப்பு ஆடுகள் உள்ளன என்பதை அறிய முடிகிறது.

இராணுவம் என்பது தீர்வல்ல. அது நமது திருப்திக்கான பாதுகாப்பு. அதாவது நாம் பாதுகாப்பாக உள்ளோம் என்பதை காட்டுவதற்கான அமைப்பு.
எங்கும் அன்பு அரசாளட்டும்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-Feb-19, 7:02 am)
பார்வை : 463

மேலே