இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில் புலிகிடந்த தூறு – மூதுரை 21
நேரிசை வெண்பா
இல்லாள் அகத்திருக்க இல்லாத(து) ஓன்றில்லை
இல்லாளும் இல்லாளே யாமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும். 21 - மூதுரை
பொருளுரை:
நற்குண நற்செய்கைகளை உடைய மனைவி வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் இல்லை என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை.
மனைவி இல்லை என்றாலும், மனைவி கணவனுக்கு மாறுபட்ட கடுமையான சொற்களைச் சொன்னாலும் அந்த வீடு புலி தங்கிய புதர்போல் ஆகிவிடும்.
கருத்து:
நற்குண நற்செய்கைகளை உடைய மனைவி இருக்கும் வீடே எல்லாப் பொருளும் நிறைந்த வீடு ஆகும். அவ்வாறு இல்லாத வீடு புதர்களும், மிருகமும் உள்ள காடேயாகும்.