கவிதையில் நடையழகு
பெண்ணிற்கு நடை அழகு,
வித விதமாய் அமைவதும் இந்நடையே,
அன்னம்போல ஓர் நடை நடப்பு ,
சின்ன யானையின் நடைபோல் மற்றோன்று,
துள்ளியாடும் மானின் நடையொன்று
ஆடும் மயில்போல் நடந்துவரும் அழகென்று
பெண்ணின் நடை அழகு பல பலவாய் ,,,,,
கவிதைக்கும் உண்டு நடையழகு
அழகான சொற்களின் கோர்வையில்
எதுகை மோனைகள் சந்தமொழிக்க
வெண்பாவாய் அமையும் இலக்கண நடை
அழகிய சொற்களின் கோர்வையிலே
வசனம்போல அமையும் பா தரும் ஓர் நடை
அதைத்தான் கதியம் என்றழைப்பர்
வடமொழி கவிதை இலக்கியத்தில்
அவ்வழியில் அமைந்ததே மாமுனி
ராமானுஜரின் பல வைணவ கதியங்கள்
தமிழில் இந்நடையில் பல கவிதைகளை
படைத்தளித்தார் மஹாகவி பாரதியும்
ஆங்கிலத்தில் வால்ட்விட்மனும் வசன
நடிக்க கவிதைப்படைப்பில் சூரரே
தமிழில் வெண்பாக்கள் நடை அன்னமென்றால்
அதில் வசனநடை கவிதையோ துள்ளுமயில்
நடையென்பேன் என்மனம் கவர்ந்த
கவிதை நடையும் இதுவே