மழை

வெப்பம் தாங்காமல்
வாடி நின்றிருந்தேன்
கருமேகமாக நீ வந்தாய்
உன் நெஞ்சத்தில் நிழல் கொண்டேன்
உன் கண்களில் என்னை கண்டேன்
உன் காதல் மழையில் நனைந்தேன்
முழுதுமாய் நனைவதற்குள்
மேகம் மறைந்தன
ஈரம் குறைந்தன
மறுபடி வெப்பம்
ஒரு நொடி மழைக்காக காத்திருக்கிறேன்

எழுதியவர் : நிஷாந்த் (24-Feb-19, 8:17 pm)
சேர்த்தது : nishanth
Tanglish : mazhai
பார்வை : 773

மேலே