கர்வம்

எல்லாம் தெரியும்
என்ற கர்வம்

என்னை செவிடாக்கி
போனது

செவிடாகிப் போனதால்

சிந்தை குருடாகி
நின்றது

குருடாகி நின்றதால்

மனம் ஊமையாகிப்
போனது

ஊமையாகிப் போனதால்

உணர்வு ஊனமாகி
தவித்தது..,

எழுதியவர் : நா.சேகர் (24-Feb-19, 11:20 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : karvam
பார்வை : 413

மேலே