ப்ரியப்பட்ட டேஷ் -6
ப்ரியப்பட்ட டேஷ் -6
===================
எத்தனைப் புரண்டுப் படுத்துட்டும்
நடுராத்திரியில
உறக்கம் கெட்டு உக்காந்திருக்கேன் ம்
"நினைவின் சாலையில் நீ நடந்துபோகிறாய் ..
அதோரமிருக்கிற ஒவ்வொரு பூமரமா
பின்னாடி ஒளிஞ்சு நின்னு ..
தொட்டுவிடாத இளம் பூ விடர்த்திட வேண்டி ..
கிளைகளோடு சண்டையிடுவதுபோல,
அப்பப்போ இது கனவா என்பதுபோல,
ஒரு தோணல் மின்னி மறையும்,
கிள்ளிப் பார்க்கிறேன்,
உன் துலக்கல்களுக்கெல்லாம்
அப்பாற்பட்டு நிற்கிறேன்...
தூக்கக் கலக்கமும் இல்லாமல்
கண்கள் கிறங்கி அந்நேரம் அழகாகிடுறேன்..
எல்லோரும் விசாரிப்பாங்க ம்.. "
இருப்பதிலேயே
அழகான ஊரில் பிறந்தவன் நான் ...
அதைவிட அழகானவள் நீ.
வசீகரம் பாரித்து
அத்தனை வசந்தங்களையும்
உன் ஒரு வருகையினால்
எப்படித் தந்துபோகிறாய் ம்..
கற்றறிந்திருக்கிறேன்
சிற்பநூல் முப்பத்திரண்டினுள் தன்"மயம்" போல்
நினைத்ததும்
என் இதயம் கருவுறுகிறது ..
அழிக்கவோ மறைக்கவோ செய்யும்
குற்றபோதங்களுக்கு முன்னால்
உன்னைக் கொண்டு
மன்னிக்கவோ ஏற்கவோ
முடியுமோ முடியாதோ என்ற
என் பிழை ஒளிர்கிறது
மார்கழி மாச குளுருபோல
உன் நெனப்ப வச்சிட்டு ..
எங்கிருந்து பொழச்சுப் போக ம்..
உனக்கென்ன புகைப்படத்துல கூட
கண்கள் மருள முறைச்சு பார்த்துட்டு போயிடுற ம்..
அதைப் பார்த்தபின்பும்
வாழும் அவஸ்த்தை எனக்குதானேத் தெரியும் ம்ம் ..
அருக மருகும் நாணம் சுமந்து,
மொட்டுவெடிக்கத் துடிக்கும்
என் ஆண்மையோடு
எதைச் சொல்லி சமாதானப்படுத்துவேன்,
உன் நினைப்பினால
எவ்ளோ அழகாயிருக்கேன்னு தெரியுமா ம் ..
உன் காத்திருப்பு சுமந்த கண்கள் கூட
இன்னும் தெளிவுறாமையே இருக்கு
ம்ம் இயற்கை மூடி வச்ச முதல் பூ
காற்று முன்னால்
தன் தனிமை மரணிக்கிறபோது
இப்படித்தான் தலைக் காம்புத் தெரியாம ஆடுமாம் ம் ...
..ம்மத்தபடி இதுவரை சொன்னதெல்லாம் மறந்திடு ..
காது பொத்திக்கோ ..
கண்ணை மூடிக்கோ ..
என்னைக்காவது வந்து
இதெல்லாம் படிச்சிட்டுகூட எங்க திட்டிடுவியோ ன்னு
நெஞ்சுமுள் வேகமா துடிக்குது ம்
உன் ஸ்டுபிட் நான் ம்
(பூக்காரன்) அனுசரன்