வாழ்விலே நிம்மதி

காதலியுங்கள் விரும்பியவரை
ஆனால் நல்ல நட்பினையல்ல,
காதல் வேறு, உண்மை நட்பு வேறு,

நட்பு நண்பகல் சூரியன் போன்றது
நட்புக்கு இடறுண்டானால் சுட்டெரிக்கவும் தயங்காது
நல்ல நட்பு எல்லோர்க்கும் அமைந்துவிடாது
தேடுதற்கரிய பொக்கிஷம் நட்பு ,
நல்லது மட்டும் நலமுற கொள்ளும் நட்பு ,

தோள் கொடுப்பான் தோழன் பழமொழி
தேடித் தந்திட்ட பொன்மொழியே இது .
நண்பன் ஒரு தாயாய், உடன் பிறப்பாய்,
தவமிருந்து கிடைத்திட்ட குழந்தையாய்,
நம் நிழலோடு நிழலாய், நீங்காது காக்க
நண்பனே நம்முடன் நாமாக உள்ளவன் ,

நல்ல நட்பு கோடி கொடுத்து வாங்குவதில்லை
நாம் செய்யும் தர்மமே நமைக் காக்க நட்பாக ,
நட்புக்கு இலக்கியங்களில்
நாம் படித்த வரலாறு பலவுண்டு
நட்பு தானாக, தனக்கென்று வாழ்வதில்லை
நட்பாக, நட்போடு, நட்பின் உயிராக வாழ்கின்றது.
நல்ல நண்பன் நம்மில் நாமாக செயல்படுவான்
வாழ்விலே நிம்மதி, வாழ்கின்ற நட்பிலே......

எழுதியவர் : பாத்திமாமலர் (28-Feb-19, 11:33 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : vazhvilae nimmathi
பார்வை : 387

மேலே