நிறம் மாறும் மனிதர்கள்

மாறி வரும் காலம்
மாற்றி வருகிறது
அத்தனையும்

விதிவிலக்கா மனிதன்

மாற்றம் ஒன்றே
மாறாதது என்ற

சொற்றொடருக்கு
சொந்தக்காரன்
அல்லவா

மாறி கொண்டிருப்பதே

விதியென வகுத்துக்
கொண்டான்

சுயநல வேட்கை

மனைவியிடம் ஒருமுகம்
மக்களிடம் ஒருமுகம்
சுற்றத்திடம் ஒருமுகம்

பணியிடத்து ஒருமுகமென

மாற்றிக் கொண்டே
இருந்து

கருத்த முகத்தோடே

கடைசி பயணம்
என்பதையும் மறந்து

தன் திருமுகத்தை
தானே மறந்து

நிறம் மாறிக் கொண்டே
இருக்கும் மனிதர்கள்

எழுதியவர் : நா.சேகர் (2-Mar-19, 8:48 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 1659

மேலே