காலம்
உட்புகுந்த ஓராயிரம் உயிரணுக்களுள்
ஒன்று வென்று, சூல் கருவாகி,
கணச்சூட்டில் நாமளக்கும்
உருவாக உயிர்த்தெழுந்து,
நாட்கள் வாரங்களாகி,
வாரங்கள் மாதங்களாகி,
மாதங்கள் ஆண்டுகளாகி,
உருண்டோடி விட...
என்றோ ஓர் நாள்
உடற்கூடு விட்டு உயிரகலக்
கணச்சூடற்றுக் குளிர்ந்துறைகிறதே!
இவற்றுக்கு இடைப்பட்டதா காலம்?
இல்லையெனில் எது காலம்?
✍️. தமிழ்க்கிழவி.