அபிநந்தன்

அபிநந்தன்
வரவேற்பிற்குள் வாழ்பவனே
திரட்சிமிகு தேகமும்
மிரட்சியற்ற பார்வையும் கொண்ட போர் வீரனே

விழாக்களும் விருதுகளும் இல்லாது
உலகப்பார்வையை உன்மீது
நிலைகொள்ளச்செய்தவனே

கவலை கொள்ளாதே
சிறுநரியின் கூடாரத்தில்
சிங்கங்கள் உலவி திரும்புவது இயல்புதானே

ஓ பாரதத்தாயே
நீ பெற்ற இந்த திருமகனுக்கு
உன் பரந்த மேனியில் ஒரு விரல்நுனி கூடவா
இல்லாமல் போயிற்று தொங்கிக்கொள்ள

உன் கால் பகுதியில் கருவுற்றதால்
கைகழுவி விட்டாயோ
மாற்றான் தாய் மடியில்
மருக விட்டாயோ

அபிநந்தா
நீ நினைத்திருப்பாய் யாம் நம்புகிறோம்
தாய்மண்ணை தாண்டி விழுந்ததைவிட
வீழ்ந்திருக்கலாம்

விதி விரக்தி அடைந்துவிட்டது
உன்னை கண்டு

சாவு கைகொட்டி சிரித்து
பின் செத்துவிட்டது

நாடு போற்றும் நாட்டு வைத்தியர்களே
சித்தர்களே சிரம்தாழ்த்தி கேட்கிறேன்
அதியமான் அவ்வைக்கு கொடுத்த
நெல்லிக்கனி தேடி அபிநந்தனுக்கு கொடுங்கள்

எழுதியவர் : vaalkai (2-Mar-19, 10:41 am)
சேர்த்தது : இளவல்
பார்வை : 95

மேலே