அனைத்தும் நடந்திடும்

சுழலும் காலச்சூழலில்
நிழலும் தேய்ந்திடும்
சுற்றமும் சுருங்கிடும்
நட்பும் குறைந்திடும் !

கரையும் வாழ்வில்
மேனியும் சுருங்கும்
முடியும் உதிரும்
நரையும் விழும் !

வளரும் விஞ்ஞானத்தில்
உறவுகள் மறந்திடும்
உழவும் மறைந்திடும்
உரிமைகள் மறுக்கப்படும் !

மாறிடும் மண்ணில்
மாற்றங்கள் நிகழ்ந்திடும்
மாச்சரியம் நிலைத்திடும்
மானிடம் நீர்த்திடும் !

கலந்திடும் கலாச்சாரத்தில்
பண்பாடும் கரைந்திடும்
பழைமை புதைந்திடும்
பகைமை வளர்ந்திடும் !

கறைபடிந்த அரசியலில்
வாய்வீச்சு பெருகிடும்
வாய்மை வலிவிழந்திடும்
வாக்குறுதிகள் மறந்திடும் !

பழனி குமார்
​ 04.03.2019

எழுதியவர் : பழனி குமார் (4-Mar-19, 1:54 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 504

மேலே