சிவ ராத்திரி

ஐந்து எழுத்து மந்திரனே
ஆனை முகத்தை தந்தவனே
எல்லை இல்லாத எழிலோனே
எண்ணத்தில் நின்று ஒளிர்வோனே
தில்லையில் ஆடும் அம்பலனே
தீர்வுகள் தீர்த்திடும் தீர்த்தமேனியனே
உள்ளத்தில் வைத்தே தினம் தொழுவேனே
விடியும் பொழுதில் நினைத்தெழுவேனே
இன்பத்தில் துன்பம் தந்தாலும்
துன்பத்தில் இன்பம் வந்தாலும்
இவையாவும் நீ தந்த வரம் அல்லவா
என்றும் நீயே எந்தன் துணையல்லவா.

பாலா தமிழ் கடவுள்

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (4-Mar-19, 1:57 pm)
Tanglish : jiva raathri
பார்வை : 79

மேலே