ராக தேவதைகள் நடை பயின்றன

மூடிக் கிடந்த வீணையை
மீண்டும் எடுத்து மீட்டினேன் !
சுரங்களை மறந்திடவில்லை
கலைவாணியின் கவின்கருவி !
விரல் தொட்ட மகிழ்ச்சியில்
சாளரத்தின் தென்றல் இனிமையில்
சாயந்திர நிலவின் குளுமையில்
ராக தேவதைகள் என்முன்னே நடை பயின்றன !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Mar-19, 9:46 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

சிறந்த கவிதைகள்

மேலே