பெண்கள் தினம்

ஆணொன்று பெண்னொன்று என்ற அழகு
குடும்பத்தில் நீ பொட்டு முதல் கொலுசு வரை கேட்டு
அடம் பிடித்து ஆர்ப்பரிப்பாய்.

அம்மா கண்டிப்பாள் அப்பா அணுசரிப்பார்
அண்ணனோ தம்பியோ அவ்விடத்திலிருந்து அகன்று
அமைதியாக ஆதரிவளிப்பர்.

அன்று முதல் நீ தான் அவ்வீட்டு ராணி
ஆரம்ப படிப்பு முதல் அனைத்தும் அழகாய்
நிறைவேறும் அடுக்காய்.

வகுப்பு ஏழில் எதிர் வீட்டு பையனின் ஏக்க பார்வைக்கு
உன் உருவ அழகு உற்சாகம் அளிக்கும் அதனால்
வீட்டில் பிரளயம் வெடிக்கும்.

தடாலென தாய் அவள் படிப்புக்கு தடையிட தந்தைக்கு
கட்டளையிடுவாள் தடுமாறி போவான் அவன்
அண்ணனோ அதற்கு எதிர்ப்பான்.

உன்னை வெளியூர் விடுதியில் சேர்த்து படிக்க
உனக்காக போரிட்டு வெற்றி பெறுவான் அண்ணன்
நீயும் வெளியூர் சென்று பயில்வாய் .

உனைப்போல் பலர் அவ்வாறே அங்கு விடுதியில்
உள்ளம் நொந்து சொல்வீர் உரிமை போச்சென்று
ஆணாய் பிறந்திருந்தால் அந்நிலை வராதென்று.

முள்ளு குத்தினால் முள்ளுக்கென்றும் சேதமில்லை
செருப்பை அணிந்து சென்றால் சிறப்பாய் நடக்கலாம்
செருப்பாய் குடும்பத்தினர் உள்ளதால் சிறப்பாய் நீ

இதில் அடிமையும் இல்லை அடக்குமுறையும் இல்லை
குடும்ப பந்தத்தில் இணையும் போது கணவரும்
பிள்ளைகள் வளரும் போது அவர்களும் செருப்பாய்.
_ நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (8-Mar-19, 8:52 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : pengal thinam
பார்வை : 122

மேலே