கொஞ்ச நேரம் நீ கெஞ்சு

ஒப்பனைகள் பல செய்து
உன் கோவத்தை தணித்திடுவேன்

அதனை நீ அறிந்தவனே
என்பதையும் நான் அறிவேன்

உன்னுடன் நான் நடக்கையிலே
உலகம் அதை மறந்திடுவேன்

மகிழ்ச்சி என்ற வார்த்தைக்கு
மறு வார்த்தை நீ ஆவாய்

இவ்வாராய் கவி எழுத எனக்கும்ந்தான்
ஆசையுண்டு

என் செய்ய என் அன்பே
கொஞ்ச நேரம் நீ கெஞ்சு

அப்போது எழுதுகிறேன் எல்லாமும்
நீ என்று ...

இவள்
விஜயலட்சுமி...

எழுதியவர் : கீதாவின் மகள் (12-Mar-19, 4:50 pm)
சேர்த்தது : கீதாவின் மகள்
பார்வை : 313

மேலே