இணைய வழி காதலாலே
காமூக காதலன் ஒருவன் கள்ள மொழி பேசி உன்னை
கடைத்தெருவில் விற்கும் வரை கண்ணே நீ காத்த தேனோ?
இணைய வழி காதலாலே ஏற்ற வாழ்வு பெறலாம் என்று
இரு கண் பொத்தி நீயும் அவனை இதயத்தில் புக விட்டாயோ?
எறும்பின் பாதையை தடுத்து வைத்தால் அது
ஏற்றமிகு சினம் கொண்டு தடுத்த பொருளை கடித்து வைக்கும்
எல்லை மீறிய கள்வன் பார்வையை நீ
வெம்மை சொல்லால் எரித்திருந்தால் அவன்
பின்னங்கால் பிடறிபட பேயாட்டம் ஓடியிருப்பான்
என்ன முறையில் காதல் கொண்டாய்
எப்படி அவனை நம்பி சென்றாய் - முன்பு சொன்ன
முள்ளும் சேலையும் கதையை நீ மறந்ததேனோ?
_ நன்னாடன்