வா மகனே வா

வா மகனே வா!!😘

வா மகனே வா
வந்து என்னை பார்
நான் விழி மூடும்முன்
வந்து என்னை பார்
நித்தம் உன் நினைவே
சித்தம் முழுவதும் நீயே
பித்து பிடித்தவள் போல் ஆகிவிட்டேன்
வா மகனே வா
வந்து என்னை பார்.

அமெரிக்க வாழ்க்கை
அலுக்கவில்லையா கோடிக்கோடியாய் சம்பாதித்தது போதாதா
பணம் மட்டும் தான் வாழ்க்கையா
பந்த பாசம் மறந்து விட்டாயா
உன் அழகிய முகம்
அந்த சுருட்டை முடி
உன் பிஞ்சு விரல்கள்
அந்த மழலை சிரிப்பு
கண்ணத்தில் விழும் குழி
ஓயாத நீ செய்த குறும்பு
யாரோ சொன்ன பேய் கதை கேட்டு பயத்தில்
என்னை இறுக்கி கட்டி பிடித்து தூங்குவாய்.
உன் குழந்தை பருவம்
அந்த உருவம்
என்றும் என் நினைவில்
அகலாது.
வா மகனே வா
வந்து என்னை பார்.

உன் அப்பாவும் சென்றுவிட்டார்
சொந்தம் என்று சொல்லி கொள்ள எனக்கு உன்னை விட்டால் யாரும் இல்லையே
இல்லறம் நல்லறம்
நல்ல பெண் பார்த்து
உனக்கு திருமணம் செய்ய ஆசை
வா மகனை வா வந்து என்னை பார் .

என் உடல் தளர்ந்து விட்டது
என் மனம் சோர்ந்து விட்டது
சர்க்கரை நோய் எனது நிறந்திர நண்பன்
ஆகிவிட
ரத்த அழுத்தமும், இதயவலியும் அவ்வப்போது வந்த போகும் நண்பர்கள்.
இப்போதெல்லாம்
சாப்பாட்டை விட
அதிகம் மருந்தை சாப்பிடுகிறேன்.
என் நாட்கள் எண்ணப்படுகின்றன
இன்னும் எத்தனை நாள் உயிர் வாழ்வேன் எனக்கு தெரியாது
உன்னை காணவே இந்த ஜீவன் இன்னும் இந்த மண்ணில் இருக்கிறது
வா மகனே வா
வந்து என்னை பார்.

இக்கடிதம் கண்டவுடன் கிளம்பி வா
இனி தாமதம் வேண்டாம்
தாமதித்ததால் உன்
தாயாரை நீ உயிருடன் காண இயலாது
வா மகனே வா
வந்து என்னை பார்.

இப்படிக்கு ,

உன்னை ஒரே ஒரு முறை காண துடிக்கும்
உன் அம்மா.

பின் குறிப்பு:- இமெயில், வாட்சஅப்பில் "விரைவில் வருகிறேன்" என்று வழக்கம் போல் தகவல் அனுப்பாதே.

- பாலு.

எழுதியவர் : பாலு (16-Mar-19, 8:45 am)
Tanglish : vaa makanae vaa
பார்வை : 181

மேலே