பொள்ளாச்சி மந்தையில்
மானுடம் குத்துப்பட்டு
வெட்டுப்பட்டு
ரத்தம் சிந்துகிறது.
கொடூரன்கள்
கொடூரன்களுக்குத் துணைபோன
கொடூரன்கள்.
கொடூரன்களுக்கு விலைபோன
கொடூரன்கள்.
குற்றப் பாம்பு வளையம்
மிகப் பெரிது.
மோசம் போனவர்களைக்
காப்பாற்றத் துப்பில்லாதவர்கள்
மோசம் செய்தவர்களை
காப்பாற்றுகிறார்கள்.
கோடிக்கை சேர்ந்து
வேடிக்கை பார்க்கவோ?
வெட்டுங்கடா குஞ்சுகளை!
இனி ஒருபயல்
செய்ய அல்ல
நினைக்கவே கூடாது!