இருநூறு ஆசிபாக்கள்
பொள்ளாச்சியில் பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறந்து போனது ஆகாயத்திலே,
பொல்லாத ஆட்சியில் சில பேரரக்கன்கள் மானிட வேஷமிட்டு
மலர் செண்டுகளில் மயக்க மருந்தொளித்து
மணங்கமிழ மனங்கவர்ந்து
தனிமை படுத்தி கடத்தி சென்றான்
கானகத்தை விட்டு,.
சில பட்டாம்பூச்சியின் சிறகை கொய்து
சதையை தின்று சிதையில் போட்டான்
பெரும் பேய்பசி கொண்ட கயவனவன்.
அண்ணே அண்ணே பெல்டால் அடிக்காதிங்க பேன்டை கழட்டுறேன் என
பெருங்குரலெடுத்து கெஞ்சி கதறி பதறி
மாரில் இருகை மாராப்பிட்டு துடித்தது
சிறு வண்ணத்து பூச்சியொன்று.
ஆடை அவின்று
அந்தரங்கங்கள் அகப்பட்டது புகைபடத்துடன்.
ஒலியும் ஒளியும் உடலை படமெடுத்து
நகலெடுத்து உட்கிரகித்து கொண்டது
ஒட்டுண்ணி அரசியல் சாத்தான்கள்.
தனக்கொரு தாயுண்டு
தனக்கொரு தமக்கையுண்டு
தனக்கொரு தாரமுண்டு
தனக்கொரு தவபுதல்வியுண்டு
என்றென்னாமல்
தேகப்பசிக்கும் மோகப்பசிக்கும் பணப்பசிக்கும்
பெண்மையை புசிக்கும் பேரரக்கன்களே,
தயவுசெய்து
உங்களின் இருதயத்தையும்
அந்தரங்கத்தையும் அறுத்தெறிய வாய்ப்பு கொடுங்கள் அந்த இருநூறு ஆசிபாக்களுக்கும்..