வேட்பாளர்

தேர்தலுக்கு முன்
நோட்டு வைப்பார்
தேர்தலுக்குப் பின்
வேட்டு வைப்பார்
அவரே வேட்பாளர்

இவன் ஒரு
ஓட்டிற்கு ஆயிரம் ரூபாய்
தருவான்
அதை அரசு ஒப்பந்ததாரரிடம்
பெறுவான்

இதில் தவறு
நம் மீதா அவன் மீதா?

சாலை சேலைபோல்
கிழிந்து கிடந்தது

தார் எங்கே என்றால்
அமைச்சருக்குக் கொடுத்தார்
அதிகாரிக்குக் கொடுத்தார்
மீதி உள்ள தாரில்
சாலை அமைத்தார்

சாலை முழுதும்
குழியாக ஆனது
சாலை போட்டவர்
குண்டாக ஆனார்
குண்டும் குழியும்
என்பது இதுதானோ ?

இவன் நம் முன்
காலில் விழுந்து
பின்
காலில் விழவைப்பவன்

திறமையின்மையினால்
இயங்கும்
நிறுவனங்களுக்கு
மூடு விழாவைப்பவன்

தேர்தலுக்கு முன்
இவன் கூப்பிய கைகள்
திறப்பதே இல்லை

தேர்தலுக்குப் பின்
இவன் பூட்டிய
கதவுகள்
திறப்பதே இல்லை

நான்
உங்கள் வீட்டுப் பிள்ளை
என்பான்
வென்றவுடன்
வீட்டில் இருந்து கொண்டே
இல்லை என்பான்

தேர்தலுக்காக
குடிசை நீர்
இவன் ஊட்டியில் படும்
வென்றவுடன்
இவன் பாதம்
ஊட்டியில் படும்

தேர்தலுக்கு முன்
சின்னத்தைக் காட்டுவான்
முடிந்த பின்னே
தன் சினத்தைக் காட்டுவான்

பணம் தரமாட்டேன்
ஊழல் புரியமாட்டேன்
என சொல்பவனோ
நோட்டாவிடம்
தோற்பான்

உண்மையில்
தோற்பது நாமே

நம் கையில் மை
வைப்பதே
நேர்மைக்கு
வாக்களிக்கத்தான்

பணத்திக்காக
வாக்களிக்காமல்
நல்ல மனத்திற்காக
வாக்களிப்போம்

எழுதியவர் : புதுவை குமார் (18-Mar-19, 3:37 pm)
Tanglish : vetppaalar
பார்வை : 80

மேலே