நீர்தேடும் அலைகள்

அவன் அப்படித்தான்...
என்றோ தெரித்து விழுந்த வார்த்தைகள்
இன்றும் தடம் அழியாமல்

தெற்கிருந்து வடக்கே பயணப்பட
பாதி பயணத்தில்..
அன்னியனாகி போனேன்
தென்னிந்தியனாக...

தென்னிந்தியனாக...
அண்டை மாநிலம் சென்றிட..
பாண்டியாகிப் போனேன் பலருக்கு...?!
மடத்தமிழனாகிப் போனேன் சிலருக்கு..

சிந்தை தொலைத்து
சிறத்தையுடன் தேடிட..
தண்ணீர் தேசங்களை தொலைத்து
கண்ணீருடன்...
தண்ணீருக்காக பிறரின் தயவுடனே
தவி தவிக்கும் கூட்டமிது
உண்மை வெம்மையாக சுட்டது...

வந்தோரை வாழவைக்க
வாய்ப்புக்களை இழந்த கூட்டமிது
நிறம் கண்டு மயங்கியே
நீர்த்துப்போன கூட்டமிது..

இரண்டடியில் உலகை அறிந்தவனின்
சமூகமாம்..
மூத்தோர் மொழி கொண்ட
உலகின் முதல் மொழி கூட்டமாம்...
பிறமொழி இனிமையென்று
தன் மொழி மறக்கும் கூட்டமாம்....
தரணியாள பிறந்த கூட்டம்...
தனித்துவமென்று கூறி
தனித்தனியே தனித் தீவுகளாக..

மாற்றான் வீட்டு மலருக்கு மணமுண்டு
தன் வீட்டு மலர் காகிதமென்று
தவறாக புரிந்தானோ....?
வடக்கை வாழவிட்டு
வாழ்வின் வழிதேடி அலைகின்றான்...

தான் இன்னாரென்று அறிமுகம்
தான் தமிழன் என்ற தடம் மறைத்து..
தடம் மறைத்த காரணமோ...
இந்தியனென்று ஏற்கப்படாமலேயே....?

எழுதியவர் : சா.மனுவேந்தன் (19-Mar-19, 4:59 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 478

மேலே