கண்ணெதிரே தோன்றினாள்---பாடல்---
சொந்த மெட்டில்...
பல்லவி :
ஆகாயத்து நெலவு என் கண்ணில் விழுந்த பொழுது
ஆகா வண்ணக் கனவு என் நெஞ்சில் வந்து விழுது...
இவள் மேகம் பூத்த மலரு
புது மோகம் ஏத்தும் அழகு
ஒரு காதல் ஆசை வருது
ஒரு காதல் ஆசை வருது...
ஆகாயத்து...
சரணம் 1 :
பூவாலே செஞ்சு வச்ச அம்மன் சிலையே
அவள் போறாளே கண்ண விட்டு நெஞ்சில் கொலையே... (2)
திருவிழாவில் தொலைஞ்சு போகும்
சிறு குழந்தையப் போல
என் இதயம் தொலைஞ்சு போகுதே...
பூக்கடையில் தொடுத்து வச்ச
மலர்ச் சரங்களின் வாசம்
அவள் இருக்கும் இடத்தக் காட்டுதே...
இந்தப் பொம்மையின் கண்கள் எல்லாம் என்னத்தான் மொறச்சுப் பாக்குது...
அவள் காது கம்மலில் ஒரசும் காத்து என்மூச்சா மாறித் துடிக்குது...
மன ஆசைகள் நிறைவேற நான் கடவுள வேண்டிக் கிட்டேன்
அவள் கொட்டியத் திருநீற என் நெத்தியில் பூசிக் கிட்டேன்... (2)
ஆகாயத்து...
சரணம் 2 :
தேராக அசைஞ்சு வரும் பச்சக் கொடியே
எனை வேரோடு புடுங்கி நட்டா தொட்ட நொடியே... (2)
மின்வெளக்கு விழிகள் ரெண்டும்
ஒரு பனித்துளி போல
என் மனச விழுங்கித் திரும்புதே...
கை வளையல் எடுக்கும் போது
அவள் சிரிச்சிடும் ஓசை
என் காதல் கிறுக்கக் கூட்டுதே...
சங்குக் கழுத்துல போடும் மணிய நான் மாட்ட எண்ணித் துடிக்கிறேன்...
அவள் மொளகா பச்சியைக் கடிக்கும் அழக ஓரத்தில் நிண்ணு ரசிக்கிறேன்...
சுழல் ராட்டினம் விளையாட என் மனசையும் ஏத்தி விட்டேன்
உயிர் தீட்டிய படமாக என் மனசுல அவள வச்சேன்ன்... (2)
ஆகாயத்து...