சொந்தங்களே சொர்க்கம்---பாடல்---
நெஞ்சத்திலே நெஞ்சத்திலே... மெட்டில்...
பல்லவி :
சொந்தத்திலே சொந்தத்திலே காட்டாதே வஞ்சத்தையே
வஞ்சத்தையே கொள்ளியிடு வாழ்வாயே இன்பத்திலே
இன்பத்திலே வானம் தொட்டு உள்ளம் செல்லும் சொர்க்கத்திலே
சொர்க்கத்திலே வந்து நின்றால் சோகமில்லை சொந்தத்திலே...
சொந்தத்திலே...
சரணம் 1 :
தாய் தந்தையைப் போய் கும்பிடு நீயே அன்பின் சிறகுகள்
சிறகுகள் நீங்கியே வாழாதந்த உறவுகள்...
உறவுகள் இணைந்திட போடு பாலம் மனதினில்
மனதினில் குடிபுகும் பாசம் என்னும் உயிரொளி...
ஒளி தீபம் எரியும் இருள் ஓடி மறையும்
மறையும் பாசம் பூத்திட பொழியும் நாளும் பூமழை...
மழைத் தூறலில் மயில் ஆடிடும் நேசம் என்றும் சொந்தத்திலே...
சொந்தத்திலே...
சரணம் 2 :
யார் வீட்டினை யார் ஆள்வது போரில் நுழையும் இருவுயிர்
இருவுயிர் மறப்பதோ?... வாழும் தாயின் கருவறை...
கருவறை அமர்ந்திடும் சாமி யாவும் உறவுகள்
உறவுகள் உடன்வரத் தாங்கும் பாரம் சிறுதுளி...
துளி நீரைக் குடித்துப் பலர் தாகம் அடங்கும்
அடங்கும் பாசக் கூட்டினில் அசைந்து பாடும் பூங்குயில்...
குயில் கூவிடும் குழல் ஊதிடும் பாடல் என்றும் சொந்தத்திலே...
சொந்தத்திலே...