வெண்ணிலவும் பெண்ணிலவும்---சந்த வெண்டாழிசை---
#சந்த_வெண்டாழிசை :
கந்த னுன்றுணை யென்று நெஞ்சிட
மந்த வெண்மதி வந்து சொன்னது
முந்தி வந்திடு முன்...
முந்தி வந்திட நெஞ்ச மிங்கிலை
யந்த மன்னவ னன்பி லென்மன(ம்)
வெந்து சென்றது விண்...
கன்ன லென்றுள வன்பி லுன்மன
மன்று தங்கியு மின்ன லென்றிட
வென்ன நின்னிலை யன்று...
வெந்த யங்கொதி யெண்ணெ யொன்றினி(ல்)
வந்து தங்கிட வெந்து சென்றிடு
மந்த வெம்மையி லன்று...
துன்ப முன்னிலி ருந்த கன்றிட
வின்ப முன்னுட னென்று மொன்றிட
வன்னை யென்றவ னங்கு...
அன்ப னந்தமி ழின்ப முண்ணுத
லென்று நின்றிடு மன்னை யன்னவு
மென்று வந்ததை வென்று...
கந்த னுன்னிழ லென்றி ருந்திட
வந்த வெண்பனி யென்றொ ளிந்திடு
மிந்த வின்னலு மின்பு...
மன்ன வன்மன முன்னை யெண்ணிடு
மன்று மங்கள முண்டு கொஞ்சிடு
மன்றி லன்பது முண்டு...
நொந்து வந்திடு மென்னை நின்மொழி
சிந்து பொன்னொளி யன்ன நன்னெறி
தந்து வென்றது நன்று...
குன்று நின்றவ னிந்த நெஞ்சினை
வென்றி கொண்டவ லிந்த வம்புலி
யன்பி லுன்னிட(ம்) வந்து...