காப்பாயோ கணேசா---எழுசீர் சந்தக் குறட்டாழிசை---

எழுசீர் சந்தக் குறட்டாழிசை :

சந்தம் : தந்த தந்தனன தந்த தந்தனன
தந்த தந்தனன தானனா


சந்த மொன்றுமன வண்டு கொண்டுவர
மந்தி யென்றுமதி யோடுதே
தந்த மொன்றுடைய வென்ற வந்தவினை
இந்த நெஞ்சமது பாடுதே...

துன்ப மென்னைவிட விந்த மண்ணுலகி
லின்று வந்திடுவி நாயகா
இன்ப மென்னிலெழ நன்றி கொன்றவரை
நின்று கொன்றிடுவி நாயகா...

கந்த லென்றுயிரு மின்று நொந்துவிழ
எந்த மங்கைநதி வாழுமோ?...
பந்த மென்றவுடை கொண்டு பெண்ணுடலை
வந்து கொஞ்சுவது காமனே...

சொந்த வன்னைமன திங்கு நஞ்சுநதி
என்ன விந்தையிது தேவனே
சொந்த வன்னையென வந்து பிஞ்சுகளை
மென்று தின்பதொரு காலனே...

விண்ண ளந்தவுரு கொண்டு மின்னுமெதை
இந்த வன்புவிழி தேடுதோ?...
கண்ணி ருந்துமினி யென்ன நன்மையென
எண்ணி உன்றனிமை மூடுதோ?...

எழுதியவர் : இதயம் விஜய் (21-Mar-19, 11:08 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 62

மேலே