மயக்குதடி உன்னழகு

சேலக்கட்டிச் சேத்துவயல் நாத்தாக வந்தவளே
ஆலமர விழுதுல எனை ஊஞ்சல் ஆடவச்சாயே
அயிரமீன் கண்ணால இமைக்காம பாத்தே
வயிரமான என்நெஞ்ச வலவீசி இழுத்தாயே...

கண்ணாமூச்சி ஆட்டம்போல் கண்மறஞ்சு போறாயோ?...
வண்ணத்துப் பூச்சியாகி ஆகாசத்துலப் பறந்தாயோ?...
காத்தோடு வாசமாகி மயங்கவச்சு மறஞ்சாயோ?...
ஆத்தோடு மீனாகி ஆழ்கடல் நுழஞ்சாயோ...

ஒத்தப்பனை நெழலாகச் சாயுதடி என்கனவு
சத்தமிலா ஆடாவந்து மேயுதடி ஓன்நெனவு
தூரநிண்ணு நீசிரிச்சாலே தூங்குதில்ல என்மனசு
சாரலென எனக்குள் அலையுதடி ஓன்வயசு...

வானவில்லு போலத்தான் என்னையும் வளச்சாயே
தேனப்போல் உன்னழகால் என்னுசுர குடிச்சாயே
அடங்காத காளத்தான் கன்னுக்குட்டி ஆனதே
நடக்காதோ?... கண்ணாலம் எண்ணித்தான் வாடுதே...

பூவெல்லாம் மறியல் பண்ணிக் கெடக்குதடி
இராவெல்லாம் நெலவும் சூரியனா எரிக்குதடி
பக்கத்துல வந்தென்ன கட்டி அணைச்சுக்கடி
துக்கம் எனைவிட்டு தொலஞ்சு போகுமடி...

எழுதியவர் : வாழ்க்கை (21-Mar-19, 11:14 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 5627

மேலே