என் வாழ்வோடு

என் ரசனைக்குள் அகப்படும்
பனித்துளியாக வேண்டாம்-நீ
என் உயிருக்கு ஆதாரமாகும்
நீர்த்துளியாய் இரு...

என் மகிழ்வுக்குச் சொந்தமாகும்
நிகழ்வாக வேண்டாம் -நீ
என் ஆயுள் வளர்க்கும்
சுவாசமாக இரு...

நீயிருக்கும் இடம் தான்
மலர்வனம்
இப்பூக்களைப் போல.....

நீ தாங்கிடும்
நொடிகள்
மலரைத் தாங்கும்
காம்பு போல
மனம் மகிழுது....

என்றும் மலராக நான்
எனை மட்டுமே தாங்கும்
காம்பாக நீ வா
என் வாழ்வோடு...

எழுதியவர் : சிவா பாலா (21-Mar-19, 11:28 pm)
சேர்த்தது : சிவா பாலா
Tanglish : en valvotu
பார்வை : 437
மேலே