புள்ளி

வாழ்க்கையின் தொடக்கம் புள்ளியிலே
வரிகளின் தொடக்கம் புள்ளியிலே
வரிகளின் முடிவும் புள்ளியிலே
ஆட்சியை தேர்ந்தெடுப்பதும் புள்ளியிலே

புள்ளிகள் இணந்தால் ஓர் உருவம்
புள்ளி விவரங்கள் என்றும் துல்லியமே
ஆட்காட்டி விரலின் நுனியில் வைக்கும்
புள்ளியின் மகத்துவம் அறிவீரோ

நம் எண்ணத்தின் பிரதிபலிப்பு இப்புள்ளி
தேர்தலின் ஆணிவேர் இப்புள்ளி
ஐந்தாண்டுக்கு ஒருமுறை உயிரத்தெழுமே
உன் வாக்குக்கு மதிப்பையும் சேர்த்திடுமே

இப்புள்ளியின் தத்துவம் அறிந்திடுக
உன் உரிமையை உனக்கு உணர்த்திடுமே
விலை பேச முற்பட்டால் நாணிடுமே
தவறவிட்டாலோ ஆயுள் முடிந்திடுமே

சிறிதாய் இருப்பது இதன் வடிவம்
வட்டமாய் இருப்பது இதன் இயல்பு
கருப்பு வண்ணத்தில் ஒட்டிக்கொள்ளும்
நம் விரலோடு சங்கமம் ஆகிவிடும்

அன்போடு இதை நாம் வரவேற்போம்
உரிய மரியாதை தந்திடுவோம்
அதன் இலட்சியத்தை அது அடைய
தகுந்த ஒத்துழைப்பு தந்திடுவோம்

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (23-Mar-19, 5:52 pm)
Tanglish : pulli
பார்வை : 48

மேலே