முகநூல்

காதல் தேடும்
பலமுகங்கள்
காதல் தொலைந்த
சிலமுகங்கள்
அநுபவம் சொல்லும்
பலமுகங்கள்
அநுபவத்தை பெற்ற
சிலமுகங்கள்
மனநலம் பாதித்த
பல முகங்கள்
பலவீணப் பட்ட
சில முகங்கள்
வக்கிரத்துக்கு பிறந்த
பலமுகங்கள்
வக்கிரமாகிப்போன
சிலமுகங்கள்
வக்கிரங்ள் விற்கும்
தனி முகங்கள்
அடையாளம் இல்லா
பலமுகங்கள்
பாலினம் தொலைத்த
சிலமுகங்கள்
பாலினம் தெரிய
பலமுகங்கள்
இன்னும் பிறமுகங்கள்
கொண்ட
முகநூல் பக்கத்தில்
நானும்
ஒரு பக்கமாய்
அருமையான ஒரு
பொக்கிஷம்
சரியான முறையில்
படித்தால்