கனக சபாபதி

கனகசபாபதி...
கோவில்பட்டியில் கல்விக்கு அதிபதி...
விகே புதூரில் செல்வத்துக்கு அதிபதி...
ஜிஸிஇ யில் வீரத்துக்கு அதிபதி...

இனிக்க இனிக்க பேசுவான்..
சிலசமயம் தணிக்கை
செய்யாமலும் பேசுவான்...
மீசை வச்சக் குழந்தை இவன்..
உலகியலை மிச்சம் வைக்காமல்
கற்றுத் தேர்ந்த பெரியவன்...

பாடங்களைக் கூட கதை கதையாய்ச்
சொல்லிக் கொடுப்பான்...
கதைகளைப் பாடங்களாய்ச்
சொல்லித் தருவான்...

சபாவின் வகுப்புகளுக்கு
வராத மாணவர்கள்
வருத்தம் கொள்வார்கள்...
வந்தவர்கள் ஆகாயம் மிதப்பார்கள்...
பேராசிரியர் சபாவின் வகுப்புகளில்...
மாணவர்களின் வருகைப்பதிவு
சபாவின் வருகைப்பதிவை விட
அதிகமாக இருக்கும்...

ஊர்க்குருவிகள் பருந்துகளாகும்..
இவனது கற்பித்தலின் வீரியத்தில்..
உலக வீதிகளில் உயரப்
பறக்கும்... பருந்துகளாகவே...

கிராமத்துக் குயில் இவன்...
வாத்தியார் இல்லாமலேயே
பாடத் தெரிந்தவன்...
கல்லைக் கனியாக்கும்
முள்ளை மலராக்கும்
வெண்ணிலாவை எங்கே என
இவன் கேட்பான்...
காந்தமோ.. ஏகாந்தமோ..
பாட்டாகவே பாடிவிடுவான்...

இவனது பழக்க வழக்கங்கள்
சுத்தமான நெய்யினால்
செய்யப்பட்டவை... ஸ்மோக்கிங்...
லாகிரி வஸ்துகள்.. போன்ற
கலப்படம் இல்லாதவை...

இவன் சிரிப்பு நல்ல
ஒலியும் ஒளியும்...
அதைப் பார்க்க நம்
கவலைகள எளிதில் ஒழியும்...

இந்தச் சூரியன்
உலகின் எட்டுத் திக்கிலும்
உள்ள இவனது மாணவர்களுக்கு
அறிவொளி வழங்குகிறது...
இதனாலும் வையகம் வளர்கிறது...

தங்கத்தில் வேலை செய்யத்
தெரிந்த சபாபதி இப்போது
வேலையைத் தங்கமாகச் செய்கிறான்...
கல்வியில் சிங்கமாகத் தெரிகிறான்...

கனக சபாபதி...
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
வாழ்க பல்லாண்டு...
வளங்கள் எல்லாம் பெற்று...
வசந்தங்கள் உந்தன்
கை கோர்க்கட்டும்...
வானமும் வசப்படட்டும்...
👍😀💐💐🌹🌷🎂🍰

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (25-Mar-19, 11:35 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 174

மேலே