வளமிகு சொல்லாடலால் சொக்க
வள்ளுவனை கம்பனை தன் வயிற்றில் சுமந்ததால்
வற்றா புகழ் பெற்றது வளமிக்க தமிழ்நாடு
வார்த்தையில் சூத்திரம் வைத்த வள்ளவனும்
வர்ணங்களை வார்த்தையில் புகுத்திய கம்பனும்
வளமிகு சொல்லாடலால் சொக்க வைத்தனரே.
சீர்மிகு சிந்தனையை செம்மொழியில் இயம்பினரே
சிறுவார்த்தைக் கொண்டு பெருஞ்சேதி புனைந்தனரே
அறிவுப் பசித்தோருக்கு அழகு தமிழில் உணவிட்டனரே
ஆரும் சொல்லாத ஆற்றல் கருத்தை உலவ விட்டனரே
காலம் மண்டியிடும் காரண கர்த்தா ஆயினரே.
தெய்வ மொழியான செந்தமிழ் என்னும் சிலையில்
வள்ளுவனும் கம்பனும் நேந்திரமாய் நிலைக்க
இளங்கோவும் சாத்தனும் காது மடலை அலங்கரிக்க
பரணியால் செயங்கொண்டான் பண்னிசைக்க
கமிலன் பாடல்பாடி இவர்களோடு பங்கு கொண்டானே.
--- நன்னாடன்