காலடியில் கடல்!
ஏ! தோழனே....
எழிந்திரு!
வானம் இடிந்து கீழே விழலாம்!
தோல்வியை கண்டு
நீ கலங்கலாமா!
என்ன வெற்றி வேண்டும் உனக்கு?
அமெரிக்க ஜனாதிபதி ஆகவேண்டுமா?!
நீ இந்திய குடிமகனடா....
மார்தட்டிகொள்
நான் இந்தியன்
என்று சொல்ல!
உன் திறமைக்கு
எந்த இதயமும் செவி சாய்க்கவில்லையா!
சாய்ந்துவிடாதே சோர்ந்துவிடாதே!
உலகமும் ஒருநாள் உனக்காக சுழலும்!
பட்டாம்பூசியின் ஆரம்பம் புழுவாய் இருக்க
நீ ஆரம்பமே மனிதனடா!
சாதனையை சாதிக்கும் முன்,
சோதனை பல உண்டு!
நீ அஞ்சலாமா அதை கண்டு!
வெற்றி எவருக்கு வேண்டுமானலும் வரலாம்!
ஆனால் சாதனை சிலருக்குத்தான்!
சிந்தித்தால்
உன் காலடியில் கடல்!
கடற்கரையில் மட்டும் அல்ல!
வாழ்க்கை கரையிலும்!