பெண்ணே நீ யார் தெரியுமா

நீ கண் விழிக்கும்
நேரம் எல்லாம்
விண்மீன்கள் விடுமுறை
கேட்கும்...

நீ கண் உறங்கும்
நேரம் வந்தால்
வெண்ணிலா ஈடு
கட்டும்...

என் இமைகள் இரண்டும்
ஓய்வு மறுத்தால்
உன் கால் கொலுசு
உறங்க வைக்கும்...

ஊர் கோயில்
சாத்தி இருந்தால்...
ஊர்வலம் வந்து உன்னிடம்
ஊர் வரம் கேட்கும்!

என்றும் அன்புடன்,
மதன்

எழுதியவர் : மதனகோபால் (30-Mar-19, 8:16 am)
சேர்த்தது : மதனகோபால்
பார்வை : 2363

மேலே