கரையாத மேகங்கள்
மழைச் சாரலில்
மயக்கும் வேளையில்
மதி மயங்கிய நேரம்
மான் விழி அவளின்
மாயப் புன்னகை
மாரீசனாக மாறிய வேளை
சல சல நீரோட்டோத்தில்
சத்தமான மௌனத்தில்
சன்னமான கதிர் ஒளியில்
சந்திக்கத்தான் நினைத்திருந்தேன்
துரத்தும் கனவுகள்
துயிலாத விழிகளுடன்
தூரத்து நிலவினை
துடிப்புடன் பார்த்திருந்தேன்
காதலி அவள்
காத்திருக்கச் சொன்னாள்...
காலங்களை குறிப்பிடாமலே...?
காத்திருப்புக்கள் கரைந்தோட
காதலுடன் நான்....
கணவனுடன் அவள்....!!?