ஒத்திகை
ஒத்திகை
==================================ருத்ரா
அது தலையணை இல்லை.
ஆயிரத்தொரு இரவுகளை அடைத்து
வைத்திருக்கிறேன்.
ஒவ்வொரு இரவிலும்
ஆயிரங்கள் ஆயிரங்களாய்
நட்சத்திரங்களோடு
பேசிக்கொண்டிருக்கிறேன்.
இவ்வளவும்
உன்னிடமிருந்து
ஒரு வார்த்தையை உதிரசெய்வதற்கு
ஒரு ஒத்திகை.
ஆம்.
நமக்கு இனி
வாழ்க்கையே தேவையில்லை.
ஒத்திகையே போதும்.
இதில்
உன்னிடமிருந்து
ஒரு முத்தம் பெறுவதற்கு
ஆயிரம் பிரபஞ்சங்களைக்
கிழித்து அல்லவா
திரையிட்டுக்கொண்டு
நாடக ஒத்திகை பார்க்கவேண்டும்.
கல்யாணம்
ஆயிரம் காலத்துப்பயிர் என்றால்
காதல்
ஆயிரம் பிறவிகளின் ஒத்திகை!
===============================================