வரதட்சணை
வரதட்சணை
இது
பெண்ணின்
திருமணச் சந்தையின்
விலை
ஒரு உயிருள்ள அங்கம்
கொண்ட
ஆணின் மதிப்பு
இருபது பவுன் தங்கம்
கை கால் இருந்தும்
கிழியாத ஆடை அணிந்து
மாப்பிள்ளை
மாமனாரிடம் கேட்க்கும்
பிச்சை
வரதட்சனை
மகா லட்சுமி
நம் வீட்டிற்கு
வர நாம் கேட்க்கும்
தட்சணை
வரதட்சணை
இது
சட்டப்படி குற்றம்
சமூகத்தில்
எப்போது வரும் மாற்றம்